*பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழையும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துகள்.*
இந்த நேரத்தில் *'பெற்றோர்கள்’* கவனத்தில் கொள்ள வேண்டியவை..
1. இது படித்தால்தான் உறவுகள் மத்தியில் கௌரவம் என்று பிள்ளைகளைப் பலியிடாதீர்கள்.
2. நீங்கள் விரும்பி, உங்களுக்குக் கிட்டாத படிப்பை பிள்ளைகளின் வாயிலாக அடைந்துவிட வேண்டுமென திணிக்காதீர்கள்.
3. பிள்ளைகள் விரும்பாத படிப்பை, இதுதான் நல்லது என்று ஒருபோதும் சுமத்தாதீர்கள்.
4. கல்லூரியில் ஒரு இடத்தைப் பிடித்து தேர்ந்தெடுக்கும் படிப்பிற்கு நியாயம் செய்யும் வகையில் உறுதியான மனநிலையோடு இருங்கள்.
5. மகள்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவதுதான் முக்கியக் கடமை, ஆகவே அதுவரை ஒரு கல்லூரியில் எதாச்சும் படிக்கட்டுமே என்ற எண்ணத்தோடு அனுப்ப நினைக்காதீர்கள்.
6. தேர்ந்தெடுக்கும் படிப்பில், ஏற்கனவே சிறப்பாக இயங்கும் சிலரைத் தேடி உங்கள் பிள்ளைகளுக்கு அடையாளம் காட்டுங்கள்.
*மாணவ, மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது..*
1. ஆர்வம் இருக்கும், ஏதுவான கல்லூரிப் படிப்பை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
2. இந்தப் படிப்புதான் சிறந்தது, இது மோசமானது என்று எதையும் பட்டியலிட முடியாது.
3. எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என ஓரளவு திட்டம் வகுத்து, அதற்கேற்ற கல்லூரி பிரிவு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கவும்.
4. தேர்ந்தெடுக்கும் படிப்பின் துறையில் முடிந்தவரை தொடர்வோம் எனும் உறுதியோடு தேர்ந்தெடுங்கள்.
5. 'இதுதான் நல்லது என யாரோ சொன்னார்கள்!’ என உங்கள் வாழ்க்கையை அடகு வைக்க வேண்டாம்.
6. 'சும்மா இருக்க முடியாது, எதாச்சும் படிப்பேன், வேலை, தொழிலுக்கு அதைப் பயன்படுத்த மாட்டேன் அல்லது கொஞ்ச நாள் வேலைக்குச் செல்வேன்’ என்ற மனநிலையோடு மட்டும் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு பிறகு வீணடிக்க வேண்டாம். காரணம் அந்த இடம் மிகவும் தேவையுள்ள ஒருவருக்கானதாக இருக்கலாம். அதை மதிப்பெண், பணம், சிபாரிசு என்ற அடிப்படையில் பிடித்துக் கொண்டு நீங்களும் பயன்படுத்தாமல் இன்னொருவரையும் பயன்பெற விடாமல் செய்ய வேண்டாம்.
7. எது உங்களை வாழ்நாள் முழுக்க உயிர்ப்புடன் வைத்திருக்கும் என நினைக்கிறீர்களோ அந்தப் படிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கவும்.
Vishwa
Global Vishwa Educational Services
+91 9003381888
+91 9384222500
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் மற்றும் பல பயனுள்ள படிப்புக்களில் தமிழ்நாடு, வெளிநாடுகளில்
தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்தில் சேரவும், அந்தக்
கல்லூரியின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் உடனே
அழையுங்கள்..
இது போட்டி உலகம்.. ஆகவே நீங்கள் தாமதிக்கும் நிமிடத்தில்
அடுத்தவர் உங்கள் இடத்தினை நிரப்பிடுவார்..
Global Vishwa
GLOBAL VISHWA EDUCATIONAL SERVICES
90033 81888