NEET UG 2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
NEET UG 2024: நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவில் 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு;
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கமார்ச் 9 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு 2024, மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இதற்கு விண்ணப்பிக்க 16.03.2023 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் (பொது மருத்துவம்), பி.டிஎ.ஸ் (பல் மருத்துவம்), பி.எஸ்.எம்.எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் , முதுகலை மருத்துவப் படிப்புகளிலும் சேர மத்திய அரசு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இதுவரை அளவில் 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். https://exams.nta.ac.in/NEET என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஓ.டி.பி பெற முடியாமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தேசிய தேர்வு முகமை அந்த சிக்கலை சரி செய்தது.
இந்நிலையில் இந்தாண்டு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டிருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.