வணக்கம் மக்களே..!
பள்ளி /கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராக இருக்கும்
மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு...,
நன்றி : www.globalvishwa.com
2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான +2 தேர்வு முடிவுகள் மே
மாதம்[06.05.2024/திங்கள்]
அன்று வரவுள்ளது என்பதனை அறிவோம்
இந்த 2024-25 கல்வியாண்டில்
பொறியியல், மருத்துவம்,கலை மற்றும் அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில்
தங்கள் பிள்ளைகளை சேர்க்க
வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது
கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக்
கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.
மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட
வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான்
கார்டு PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில்
விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.
பிறப்பு சான்றிதழ் (Birth
certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள்
பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய
பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது
சாதி சான்றிதழ் (Community
certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல்
தங்கள் கைவசம்* இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும்.,இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய
டிஜிட்டல்/பிடிஃஎப் வடிவில் கொடுக்கப்படுகிறது.
இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில்
இடம் கிடைக்க தேவை மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை
பிறப்பிட சான்றிதழ் (Nativity
certificate) இல்லாதவர்கள் புதியது
ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும்.,இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது
இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான்
என்பதை உறுதிபடுத்தி,பொறியியல்/
மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை
முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை,தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும் முதல்
தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது
வருமான சான்றிதழ் (Income
certificate) தேவையுள்ளவர்கள் வாங்கி
வைத்துக்கொள்ளவும் இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை மற்றும் வருவாய்வழி
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ்
தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வாங்கி
வைத்து கொள்ளவும் 2-7 நாட்களுக்குள்
கிடைத்துவிடும்
நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS/ BDS) விண்ணப்பிக்க
விரும்புவர்கள், போட்டோ
மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும் மேலும்., பெற்றோர்களின் சாதி
சான்றிதழும் தேவை
பெற்றோர்களுக்கான அறிவுரை:
1. மாணவர்களின் பெயர்கள்
இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது
2. மாணவர்களின் மாற்று
சான்றிதழ் (TC), மதிப்பெண்
சான்றிதழ் (10th, 11th and 12th Mark sheets) மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து
வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF/JPEG வடிவில் சேமித்து
வைத்துகொள்ளவும் குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பிகள் (ஜெராக்ஸ்) தேவை.
3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும்
முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என
எங்களை போன்ற அரசு பதிவு பெற்ற (NGO) கல்வி ஆலோசனை மையத்தில் கலந்து பேசி தீர்மானம் செய்து
வைத்து கொள்வது நல்லது
4. மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள்
எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப
அட்டை, ஆதார்
அட்டை, ஓட்டுநர்
உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை
இன்றி சரியாக, ஒரே
மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
5. கல்லூரி சேரக்கை/ தகவல்களை
கல்வி அறக்கட்டளை, நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய
இணையதளம் மூலம் அறிந்து வரவும்.
6. தற்பொழுது பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல்
/சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
7. பெரும்பாலான தனியார்
கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே
ஆரம்பித்துவிட்டன
8. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான சில
தினங்களில் பொறியியல் கலந்தாய்வு, பொது மருத்துவ கலந்தாய்வு மற்றும் வேளாண்
படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படலாம்
For
Free Admission Guidance : 90033 81888
For Engineering
Counselling Free TNEA Application – 74188 99144
Please share All friends & All social media's
Thanks 

Regards
GLOBAL
EDUCATION TRUST
90033
81888 / 74188 99144
COIMBATORE
| SALEM | ERODE | TRICHY | CHENNAI | PONDICHERRY | BANGALORE