கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - நேரடி லிங்க், கட்-ஆஃப், முக்கிய நாட்களின் விவரம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்
வழங்கப்படும் கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு (BVSc & AH) மற்றும்
கால்நடை சார்ந்த பி.டெக் (B.Tech)படிப்புகளுக்கு இன்று (மே 26) தேதி முதல் ஆன்லைன்
விண்ணப்பம் தொடங்குகிறது. 12-ம் வகுப்பு மதிப்பெண்களிடன் அடிப்படையில் இப்படிப்பிற்கு
மாணவர் சேர்க்கை நடைபெறும். கால்நடை மருத்துவப் படிப்பிற்கு மற்றும் கால்நடை
சாரந்த படிப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்ந்து படிக்க
விரும்புகிறவர்களுக்கு கால்நடை அறிவியல் மருத்துவப் படிப்பு சிறந்த வாய்ப்பாக
அமைக்கிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை
பட்டப்படிப்பு (BVSc & AH) மற்றும் கால்நடை சார்ந்த (B.Tech) படிப்புகளுக்கு இன்று (மே 26)
முதல்
விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.
கால்நடை சார்ந்த படிப்புகள்
தமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் 7 கல்லூரிகளில் 5.5 ஆண்டு கால்நடை
அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை பட்டப்படிப்பு (BVSc &
AH) மற்றும் 3 கல்லூரிகள் மூலம் 4 ஆண்டு கால்நடை சார்ந்த B.Tech படிப்புகள்
வழங்கப்படுகிறது. உணவு தொழில்நுட்பம், கோழிப்பண்ணை தொழில்நுட்பம் மற்றும் பால்
தொழில்நுட்பம் ஆகியவற்றில் B.Tech பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில்
சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு கல்லூரிகளில் 420 இடங்கள் அகில இந்திய
ஒதுக்கீட்டில் 15% வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 597 இடங்கள் தமிழ்நாட்டு
மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5%
இட ஒதுக்கீடு
வழங்கப்படுகிறது.
நீட் தேர்வு அவசியமில்லை
BVSc & AH படிப்பில் சேர நீட் தேர்வு அவசியமில்லை. 12-ம் வகுப்பு மதிப்பெண்கள்
அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இருப்பினும் கால்நடை மருத்துவ கவுன்சில்
மூலம் நிரப்பப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் 15% இடங்களுக்கு
நீட் தேர்வு கட்டாயமாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
12-ம் வகுப்பை முடித்து கால்நடை சார்ந்த படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tanuvas.ac.in/ என்ற
இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். BVSc & AH படிப்பிற்கு
விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250
செலுத்த
வேண்டும். பி.டெக் பாடப்பிரிவிற்கு ரூ.900 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.450
செலுத்த
வேண்டும்.
முக்கிய நாட்கள்
விவரம் |
தேதிகள் |
விண்ணப்பம் தொடங்கும் நாள் |
26.05.2025 காலை 10 மணி முதல் |
விண்ணப்பிக்க கடைசி
நாள் |
20.06.2025
மாலை 5 மணி வரை |
தரவரிசை பட்டியல் |
பின்னர் அறிவிக்கப்படும் |
கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு 2025
மாணவர்களின் 12-ம் வகுப்பு
மதிப்பெண்களிடன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து,
கலந்தாய்வி
நடைபெறும். கலந்தாய்வின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள்
ஒதுக்கப்படும். அயல்நாடு வாழ் இந்தியர்கள் (NRI), அயல்நாட்டினர்களும்
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்கள்
BVSc & AH (Academic)
வகுப்பு பிரிவு |
2023-24 |
2024-25 |
ஒசி |
196.50 |
197.50 |
பிசி |
195.00 |
194.50 |
பிசிஎம் |
188.50 |
192.00 |
எம்பிசி/டிஎன்சி |
195.50 |
194.00 |
எஸ்சி |
193.00 |
191.50 |
எஸ்சிஏ |
189.50 |
186.00 |
எஸ்டி |
189.00 |
188.50 |
BVSc& AH (Vocational)
ஒசி |
- |
193.00 |
பிசி |
188.50 |
185.50 |
பிசிஎம் |
177.00 |
165.00 |
எம்பிசி/டிஎன்சி |
187.50 |
185.00 |
எஸ்சி |
185.50 |
169.00 |
எஸ்சிஏ |
169.50 |
190.00 |
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு
வகுப்பு பிரிவு |
கட்-ஆஃப்
மதிப்பெண்கள் |
பிசி |
192.50 |
பிசிஎம் |
187.00 |
எம்பிசி/டிஎன்சி |
193.00 |
எஸ்சி |
192.00 |
எஸ்சிஏ |
193.50 |
எஸ்டி |
187.50 |
ஆர்வமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வழியாக இன்று முதல்
விண்ணப்பிக்க தொடங்கலாம். விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள்
ஏற்பட்டால் admission@tanuvas.org.in என்ற இமெயில் முகவரி மற்றும் 8925032806,
7338946871 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளலாம். சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 044
– 29997349 & 044 – 29997348 என்ற எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.