:::: MENU ::::
  • GLOBAL EDUCATION SERVICES

  • BEST EDUCATIONAL GUIDANCE

  • GLOBAL EDUCATION SERVICES

  • GLOBAL EDUCATION SERVICES

  • GLOBAL EDUCATION SERVICES

  • ALWAYS A STEP AHEAD

  • April 06, 2023

Single Girl Child Scholarship : ஒற்றை பெண் குழந்தையா உங்களுக்கு? என்னென்ன ஸ்காலர்ஷிப் இருக்கிறது? எதற்கு விண்ணப்பிக்கலாம்?

 


பெற்றோர்கள், மாணவிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கான 6 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்வி பயிலும் ஒற்றை பெண் குழந்தைகளுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டங்களை நடைமுறையில் கொண்டு வந்துள்ளன.

இந்தியாவில் உள்ள பல புகழ்பெற்ற நிறுவனங்கள், கல்வி பயின்று வரும் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன. இந்த நிதி உதவித்தொகையானது பெண்கள் விருப்பமான தொழிலை தேர்ந்தெடுக்கவும்,  தமது கனவுகளை நனவாக்கவும் உதவி புரிகிறது. பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிறுவனங்கள் கல்வி பயிலும் மாணவிகளுக்கு நிதி உதவி வழங்குகின்றன.

 

தற்போது நடைமுறையில் உள்ள ஆறு பெண் கல்வி உதவித்தொகை திட்டங்களைப் பார்க்கலாம்.

*சிறந்த மாணவிகளுக்கான டாடா ஹவுசிங் உதவித்தொகை:*

இந்த உதவித்தொகை திட்டம் தொழில்முறை மற்றும் தொழில்நுட்பக் கல்வியைத் தொடர விரும்பும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. கட்டிடக்கலை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் இதுபோன்ற பிற படிப்புகளைப் படிக்க விருப்பம் இருந்தும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் தேர்வில் 50%க்கு மேல் மதிப்பெண் பெற்ற  மாணவியாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பி.டெக் அல்லது பி. ஆர்ச் பட்டப்படிப்பில்  இரண்டாம் ஆண்டில்  கல்வி கற்கும் போது இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது. அதிலும் குறித்த மாணவியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3,00,000க்கு குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் மாணவிக்கு நிதி உதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு ரூ.60,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 

*இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை:*

 

இந்த இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவி திட்டமானது, வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை பெற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் இது திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. வீட்டில் ஒரு பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மேற்படிப்பு படிப்பதற்காக இந்த திட்டம் உதவி புரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,200 பண உதவி வழங்கப்படுகிறது.

 

இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை திட்டத்தில் இணைவதற்கான தகுதியாக, வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தையாக இருந்து ,அவர் முதுகலை படிப்புகளை பயின்று கொண்டிருந்தால் இந்த நிதி உதவி அவர்களுக்கு வழங்கப்படும்.

 

*சஷாக்ட் உதவித்தொகை:*

 

இந்த உதவித்தொகை திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சேர விரும்பும் மாணவிகளை ஊக்குவிக்குவதற்காக வழங்கப்படுகிறது.

 

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை முடித்தவுடன் மாணவிகள் இந்த உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.  இதில் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியை பெறுவதானால் குடும்ப வருமானம் ரூ.5,00,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.மேலும் இந்த நிதித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ.2,40,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

 

*லெக்ராண்ட் எம்பவரிங் உதவித்தொகை திட்டம்:*

 

Legrand Empowering Scholarship Program : மாணவி படிப்பை முடிக்கும் வரை ஆண்டுக் கட்டணத்தில் 60% (ரூ.60,000 வரை) இந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. சிறப்புப் பிரிவில் உள்ள மாணவிகளுக்கு, ஆண்டுக் கட்டணத்தில் 80% (ரூ.1,00,000 வரை) வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியானது மாணவியின் கல்வித் திறனை பொறுத்து கொடுக்கப்படுகிறது.

இது இந்தியாவில் அறிவியல் அல்லது நிதித் துறையில் பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் மாணவிகளுக்கான நிதி திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு 12 ஆம் வகுப்பு முடித்து 70% அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

 

*இன்டர்ன்ஷாலா உதவித்தொகை:*

இன்டர்ன்ஷாலா ஸ்காலர்ஷிப் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25,000 வரை ஆண்டு நிதி உதவி வழங்கப்படுகிறது. 17 முதல் 23 வயதுக்குட்பட்ட இந்திய மாணவிகள் விண்ணப்பிக்கவும், பயன்பெறவும் தகுதியுடையவர்கள் கூறப்படுகிறது.

 

*பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை:*

 

இந்த உதவித்தொகை திட்டம் ( மாணவிகளுக்கான அரசு திட்டமாகும் ) சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கல்வி பயிலும் மாணவிகளுக்குரிய திட்டமாகும். இது இந்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் (MoMA) வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு ₹6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

*இன்டர்ன்ஷாலா உதவித்தொகை:*

இன்டர்ன்ஷாலா ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25,000 வரை ஆண்டு நிதி உதவி வழங்கப்படுகிறது. 17 முதல் 23 வயதுக்குட்பட்ட இந்திய மாணவிகள் விண்ணப்பிக்கவும், பயன்பெறவும் தகுதியுடையவர்கள் என கூறப்படுகிறது.

 

சீக்கிய, முஸ்லீம், ஜெயின், கிறிஸ்தவ, பார்சி மற்றும் பௌத்த சமூகங்களைச் சேர்ந்த  மாணவிகளும் இந்தத் திட்டத்தில் பலன்களை பெற முடியும். குறித்த மாணவி ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அவரது குடும்ப ஆண்டு வருமானமும் ரூ.2,00,000க்கு குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

www.globalvishwa.com

-

 

A call-to-action text Contact us